சமயங்கள் பயணம் செய்வது நாம் அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனால் சமயங்கள் எப்படி கலாச்சாரங்களையும் மொழிகளையும் தாண்டி பயணம் அல்லது ‘பெயர்ப்பு’ செய்யக்கூடும்? மற்றும், சமயங்கள் பெயர்ப்புநடைமுறைகளால் மாற்றுவிக்கப்படுகின்றதா?
நம்முடன் மொழிபெயர்ப்போடு, சமயமாற்றம் மற்றும் மாறுகின்ற சுயத்தையும் ஆராய்ந்து பார்க்கவும்….
சமயநம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் புனிதநூல்கள் வரலாற்றில் வணிகபாதைகளையும் தொடர்பு இணைப்புகளையும் பின்பற்றி உலகமெங்கும் மக்களோடுகூட பயணித்திருக்கின்றது. ஆனால் தமக்கென்று நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் கொண்ட மக்களுக்கு புது நம்பிக்கைகளும் ‘சமய’மும் எப்படி தாக்கத்தை உருவாக்கக்கூடும்? அதாவது, சமயங்கள் எப்படி கலாச்சாரங்களையும் மொழிகளையும் தாண்டி பயணம் அல்லது ‘பெயர்ப்பு’ செய்யக்கூடும்? எதிர்மறையாக, சமயங்கள் பெயர்ப்புநடைமுறைகளால் மாற்றுவிக்கப்படுகின்றதா? மற்றும், எந்த வழிகளில், தனிநபர்கள் சமயசார்புடைய புதுக்கருத்துக்களின் அறிமுகத்துக்கு மறுமொழி கூறியிருக்கிறார்கள்? இவைகள் இந்த செயல்திட்டத்தில், சமயமாற்றம் மற்றும் மொழிபெயர்ப்போடு இணைந்து மாறுகின்ற சுயத்தையும் இணைத்து எழுப்பப்படுகின்ற உயர்மைய கேள்விகளாகும்.
குறிப்பிட்ட சமய நம்பிக்கைகளைச்சார்ந்த கருத்துக்களும் தகவல்களும் மொழிப்பெயர்ப்புச்செயல்களினால் எப்படி பரவுவது என்பதை ஆராய்ந்துப்பார்ப்பது மிகவும் விரிந்த புலனாகாத செயலாகும். சமய இடைமாறுபட்டக்காலத்தை பயனுள்ள நிலையில் புரிந்துக்கொள்ள இந்த செயல்த்திட்டம் ஒரு குறிப்பிட்ட மாற்றத்தின் அறிகுறியை மையப்படுத்துகிறது. அது சுயசரிதைக்கூற்றுகளே. சமயமாற்றத்தைச் சுட்டிக்காட்டுகின்ற செயர்ப்பாங்கை இவை பலகோணங்களிலிருந்து ஆராய வாய்ப்புகள் அளிக்கின்றது. இங்கு நாம் ‘சமயமாற்றம்’ என்ற கருத்தை விரிவான பார்வையில் எப்படி மொழிப்பெயர்ப்புச் செயல்கள், தனிநபரின் சமயமாற்றம் மட்டுமல்லாமல் சமயநம்பிக்கைகளின் அமைப்புக்களின் மற்றும் முறைமைகளின் மேல் தாக்கம் செலுத்துகிறது என்பதை குறிப்பிடவும் பயன்ப்படுத்துகிறோம்.