இந்தியாவில் சீர்த்திருத்தக் கிறிஸ்துவத்துக்கு சமயமாற்றம் 1706 ஆம் ஆண்டில் ஜெர்மன் நாட்டுச் சமயப்பரப்பாளர்களின் வருகையோடு துவங்கினதைத்தொடர்ந்து 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டு காலனியக்காலம் வரையிலும் நடைப்பெற்றது. சீர்த்திருத்தக் கிறிஸ்துவம் (தனி நபரின் சமய நம்பிக்கை) சுயப்பரிசோதனை, சுயபுரிதல், மற்றும் முதிர்வுக்கான வளர்ச்சியடைந்த தனி நபரின் சமயநம்பிக்கைக்கு முக்கியத்துவம் வழங்கினது. தனி நபரின் வாழ்க்கைக்கு கிடைத்த இந்த முன்னுரிமை 18ஆம் நூற்றாண்டின் மத்தியகாலத்திலிருந்துருவான 'வாழ்க்கை-எழுத்து', முக்கியமாக சுயசரிதைகளிலிருந்து புரிந்துக்கொள்ள முடியும். இந்தியர்களின் சமயமாற்றச்சரிதைகள் பல்வேறுப்பட்ட இலக்கியவகைகளாக - முழுநீள நூல்கள், துண்டு வெளியீடுகள், விளம்பர சிற்றேடுகள், பத்திரிகைக்கட்டுரைகள், கடிதங்கள், அன்றாட நிகழ்ச்சிக்குறிப்பேடுகள் - ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமல்லாமல் பல்வேறு இந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டது. இவை இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் மிக அதிக அளவிலே பரப்பப்பட்டது.
சமய அடையாளங்களின் உருவாக்கம் இந்தியாவை பொறுத்தவரையிலும் அரசியல் மற்றும் சமூகவியல்ச் சார்ந்து சிறப்புத்தன்மையுடையவையாகும். அதிலும், நவீன இந்தியாவின் சமய இணைப்புகள், சமயமாற்றம் மற்றும் அடையாளப்படுத்துதல் இந்திய தேசீய இனம் வளர்ச்சியடைவதில் நேரடியாக தொடர்புக்கொண்டுள்ளது. பிற்கால காலனியக்காலத்திலிருந்து அரசியல் உரையாடல் மற்றும் சமயக்குழுக்களை இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உகந்தவையாக அடையாளப்படுத்துதல் என்பவைகளை 'சமயமாற்ற அரசியல்' அமைத்திருக்கின்றது. ஜாதியடையாள அரசியலில் சமயமாற்றம் சிறப்புப்பங்கேற்று, இந்து சமய தேசீயம் 20ஆம் நூற்றாண்டின் அரசியல் கருத்தாக மாறுவதிலும் செயல்ப்பட்டிருக்கிறது. இன்றைய இந்திய அரசியலில்க்கூட, பல மாநிலங்களின் சமயமாற்ற எதிர்ப்புச்சட்டங்கள் மற்றும் விஷ்வஹிந்துப்பரிஷத்தின் 'வீடு திரும்பு' சம்பவங்களும் சமயமாற்றம் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
18ஆம் நூற்றாண்டுக்கு முன்பாகவே சமயமாற்றத்தின் நீளமான வரலாறு இருந்தால் கூட எழுத்துமுறையில் சுயநபர்களின் சமயமாற்றப் பிரதிபலிப்பு இல்லாமலிருந்தது. 18ஆம் நூற்றாண்டின் கடைசி வரையிலும் சமயமாற்றத்தொகுப்புகள் கேட்பவர் அல்லது சரிதையாளரின் பேச்சுக்குரல் வழியாகவே நிலைத்திருந்தது. கையெழுத்துப் பிரதிகளாக அல்லது சிறு இலக்கியத்தொகுப்புக்களாக மாறின இவை சமயப்பரப்பாளர்களால் அச்சுப்பதிப்புக்களாக மாறினது. சமயமாற்றமடைந்த நபர்களின் சுயச்சரிதைகள் 19ஆம் நூற்றாண்டில் துவங்கி 20ஆம் நூற்றாண்டின் பிற்காலம் வரையிலும் அச்சடிக்கப்பட்டது. அச்சடிக்கப்பட்ட பிரதிகளைச் சார்ந்து இந்தச் செயல்த்திட்டம் இருப்பதால் 1947ஆம் ஆண்டு நிறைவுமையமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், 20ஆம் நூற்றாண்டின் கடைசியில் இணையத்தளத்தில் சமயமாற்றக் கதைக்கூற்றுகள், ஒலி ஒளி நாடாக்களுடன் பிரசுரிக்கப்பட்டது.
சமயமாற்றமடைந்தவர்களின் நிறைய சுயசரிதைகள் இந்தக்கட்டத்திலே பல்வேறுப்பட்ட இந்திய மொழிகளில் எழுதப்பட்டு அச்சடிக்கப்பட்டது. இவை பலவகைகளில் பரப்பப்பட்டது. அவை மக்கள் சுவைக்கேற்ப பாவமன்னிப்பு இலக்கியங்களாக பயன்ப்படுத்தக்கூடிய தனி துண்டு வெளியீடுகள், தேசீய மற்றும் தனி உள்ளூர் பத்திரிக்கைகளில் அச்சடிக்கப்பட்டக் கட்டுரைகள், பிற்க்காலத்தில் சுயசரிதைகளின் பாகங்களாக பிரசுரிக்கப்பட்ட கடிதங்கள் மற்றும் குறிப்பேடு எழுத்துக்கள் என்பவையே. சிறு துண்டுப்பிரதிகள் நிறைய நபர்களின் நாட்டத்தை கிறிஸ்தவத்தின் மேல் ஈர்த்தது. இந்த குறிப்புக்கள் சில நேரங்களில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும், மற்ற இந்திய மொழிகளில் எழுதினவைகள் ஆங்கிலத்தில் விரிவான புழக்கத்துக்காக மொழிப்பெயர்க்கப்பட்டது.
இந்த காலக்கட்டத்தில் எழுதப்பட்ட பல சீர்த்திருத்தச் சுயசரிதைகளும் பல தனி நபர்களின் சமயமாற்றப் பட்டறிவுகளை மையமானவைகளே. சீர்த்திருத்தச் சமயமாற்றமடைந்தவர்கள் 19ஆம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து அவர்களின் சமய உணர்வு நிலையை இலக்கியம் மற்றும் கலாச்சாரம் சார்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட சுயசரிதைகளின் வழியாகவே வெளிப்படுத்தினார்கள். இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மொழி மற்றும் இலக்கிய வகைகளில் ஏற்ப்பட்ட முறைமாற்றம் மூலமாக அறிவித்த சமயம் மற்றும் சமூகத் தனித்துவத்தின் உருமாற்றீடு மற்றும் மறுச்சீரமைப்பை ஆராய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
சமயமாற்றமடைந்தவர்களின் நிறைய சுயசரிதைகள் இந்தக்கட்டத்திலே பல்வேறுப்பட்ட இந்திய மொழிகளில் எழுதப்பட்டு அச்சடிக்கப்பட்டது. இவை பலவகைகளில் பரப்பப்பட்டது. அவை மக்கள் சுவைக்கேற்ப பாவமன்னிப்பு இலக்கியங்களாக பயன்ப்படுத்தக்கூடிய தனி துண்டு வெளியீடுகள், தேசீய மற்றும் தனி உள்ளூர் பத்திரிக்கைகளில் அச்சடிக்கப்பட்டக் கட்டுரைகள், பிற்க்காலத்தில் சுயசரிதைகளின் பாகங்களாக பிரசுரிக்கப்பட்ட கடிதங்கள் மற்றும் குறிப்பேடு எழுத்துக்கள் என்பவையே.
சிறு துண்டுப்பிரதிகள் நிறைய நபர்களின் நாட்டத்தை கிறிஸ்தவத்தின் மேல் ஈர்த்தது. இந்த குறிப்புக்கள் சில நேரங்களில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும், மற்ற இந்திய மொழிகளில் எழுதினவைகள் ஆங்கிலத்தில் விரிவான புழக்கத்துக்காக மொழிப்பெயர்க்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் எழுதப்பட்ட பல சீர்த்திருத்தச் சுயசரிதைகளும் பல தனி நபர்களின் சமயமாற்றப் பட்டறிவுகளை மையமானவைகளே.
சீர்த்திருத்தச் சமயமாற்றமடைந்தவர்கள் 19ஆம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து அவர்களின் சமய உணர்வு நிலையை இலக்கியம் மற்றும் கலாச்சாரம் சார்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட சுயசரிதைகளின் வழியாகவே வெளிப்படுத்தினார்கள். இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மொழி மற்றும் இலக்கிய வகைகளில் ஏற்ப்பட்ட முறைமாற்றம் மூலமாக அறிவித்த சமயம் மற்றும் சமூகத் தனித்துவத்தின் உருமாற்றீடு மற்றும் மறுச்சீரமைப்பை ஆராய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
சமயமாற்றக் கதைக்கூற்றுகள் பல இந்திய மொழிகளில் எழுதப்பட்டு பிற்ப்பாடு மற்ற இந்திய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் தொடர்ச்சியாக மொழிப்பெயர்க்கப்பட்டது. தமிழ் மற்றும் மராத்தி மொழிகளைத் தேர்ந்தெடுக்க பல காரணங்களுண்டு.
முதலாவதாக, நாம் மையப்படுத்தின காலத்தில் மட்ராஸ் (சென்னை) மற்றும் மும்பாயில் இவை இரண்டும் முக்கிய மொழிகளாக இருந்தது. எழுத்து வடிவம், மொழிப்பெயர்ப்பு மற்றும் அச்சடிப்பு பரவலாக வளர்ந்த இந்த காலத்தின் பல முக்கிய வரலாறு கட்டங்களில் இந்த இரண்டு மொழிகளிலும் சொல்லப்படக்கூடிய அளவிலே சமயமாற்றக் கதைக்கூற்றுகள் எழுதப்பட்டது. இரண்டாவதாக, 18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சீர்த்திருத்த சமயப்பரப்பாளர்களால் மொழிப்பெயர்க்கப்பட்டு அச்சடிக்கப்படட்ட முதல் மொழி தமிழ் ஆகும்.
மேலும், 18ஆம் நூற்றாண்டிலிருந்து ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளுக்கு பெயர்க்கப்பட்ட முதல் இந்திய மொழியும் தமிழ் ஆகும். மூன்றாவதாக, மராத்தி ஆவணங்கள் ஸ்கோட்லாந்து சமயப்பரப்பாளர்கள் அமைப்போடு மிகவும் இணைந்துள்ளதால் அதன் தொடர்பு ஆவணங்கள் ஸ்கோட்லாந்து தேசீய நூலகத்திலும் எடின்பரோ பல்கலைக்கழக நூலகத்திலும் பராமரிக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாமல், இந்த செயல்த்திட்டம் எடின்பரோ பல்கலைகழகத்தில் செயல்படுவதால் இந்த மொழி நூல்களை ஆராய்வது சிறப்புத்தன்மையுடையது. தமிழுக்கும் மராத்திக்கும் இடையே பெயர்ப்பு நூல்கள் குறைவாக இருந்தாலும், இந்த மொழிகளிலிருந்து சமயமாற்றக் கதைக்கூற்றுகள் ஆங்கிலத்துக்கு அதிகமாக பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த செயல்த்திட்டத்தில் ஆய்வு செய்யப்படுகின்ற சமயமாற்றச் சரிதைகள் அடிப்படை நான்கு மொழிகளில் எவையேனும் ஒன்றில் எழுதப்பட்டு இன்னொன்றுக்கு மொழிப்பெயர்க்கப்பட்ட ஒன்றாக இருக்கும்.
18ஆம் நூற்றாணடிலிருந்து தெற்கு ஆசியாவின் சமூக, அரசியல் மற்றும் அறிவுட்குகந்த மறு ஆற்றுப்படுத்துதல்கள் விளக்குவது என்னவென்றால் தனி நபர்களின் ஆன்மீயம் உட்பட வாழ்கை அனுபவங்களில் உருவான மாற்றங்கள் புது வார்த்தைகள் மூலமாக வெளிப்படுத்த வேண்டிய சூழல் உருவானது என்பதே. தமிழ் மற்றும் மராத்தி எழுத்தாளர்கள் சமஸ்கிருதம் அல்லது ஆங்கிலத்திலிருந்து வார்த்தைகளை கடன்ப்பெற்று, சமயமாற்ற சரிதைகள் ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்தில் அல்லது மராத்தி-தமிழ் இடையே மொழிப்பெயர்க்கப்படும்பொழுது தேர்ந்தெடுத்த சமயத் துறைச்சொல்களை ஆராய்ச்சி செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். மேலும் சமயமாற்ற சரிதைகளின் எழுத்து வடிவமும் மொழிப்பெயர்ப்பும் எப்படி கிறிஸ்தவ கருத்துக்களை இந்திய மக்களிடம் எடுத்துச்சென்றது என்பதையும் எந்த அளவுக்கு கிறிஸ்தவ சமயமாற்றம் மூன்று நூற்றாண்டுகளாக பரவப்பட்டது என்பதையும் நாங்கள் சோதனைக்குட்படுத்த இருக்கின்றோம்.