அடுத்த இரண்டு வருடங்களில் சமய கலாச்சாரங்களையும் தனித்துவங்களையும் உருவாக்கவும் மாற்றியமைக்கவும் கூடிய மொழிப்பெயர்ப்பின் சிறப்புத்தன்மையை முனைப்படுத்த எதிர்ப்பார்க்கின்றோம். இந்தக்குழு பல மொழிகளுக்கிடையே மொழிப்பெயர்த்துதலுக்கும் சமயமாற்றத்தின் தன்மைக்கும் அடிப்படையான பண்புகளையும் கருத்துகளையும் புத்தாய்வு செய்யும். மொழிப்பெயர்ப்பு, சமயங்கள், மற்றும் இலக்கியம் சார்ந்த கேள்விகள், சில மையக்கேள்விகளை எழுப்புகின்றதோடு புது திசைகளிலும் மெய்சிலிர்க்கின்ற பாதைகளிலும் நம்மை வழி நடத்த இருக்கின்றது.

'மொழிப்பெயர்ப்பு' மற்றும் 'சமயமாற்றம்' என்பவை மிக இணைந்து செயல்ப்படுகின்ற கருத்துக்களாகும். இவை இரண்டும் மாற்றம் மற்றும் உருமாற்றத்தின் செயர்ப்பாங்கைக் குறிக்கின்றது. இந்த மாற்றம் ஒரு மொழியின் கலாச்சாரத்தலிருந்து இன்னொன்றுக்கு மாறுவதிலோ அல்லது ஒரு சமயக்கலாச்சாரத்திலிருந்து இன்னொன்றுக்கு மாறுவதிலோ இருக்கக்கூடும். இவை இரண்டுக்கும் மாற்றம் அடிப்படையாக இருந்தாலும் அவையின் உருமாற்றம் ஏன், எப்படி நடக்கின்றது என்று ஆராய்வது தெளிவாக இல்லை. ஆயினும், இந்த இரண்டு உருமாற்றங்களும் மொழியின் மூலமாக நமக்குக் கிடைத்திருப்பதால், முன்னோக்கிச்செல்வதற்க்கு ஒரு வழியென்பது, ஒரு சமயக் கொள்கையிலிருந்து இன்னொன்றுக்கு எப்படி மொழியின் பயன்ப்படுத்துதல் செயல்ப்படுகிறது என்பதை ஆராய்வதே.

சமயத்தோடு அல்லது புனித நிலவுலகோடு இணைத்துப்பார்க்கின்ற சொற்பாங்குகளில் சிலது, 'கடவுள்', 'ஆத்துமா', 'மீட்பு', 'திருமறை', 'பரலோகம்', 'நரகம்' என்பவையே. ஆனால் இந்த ஒவ்வொருச் சொற்பாங்கும் மாறுப்பட்ட சமய, கலாச்சாரச் சூழல்களில் மற்றும் ஒரே சமயத்தின் பல பிரிவுகளில், வேறுப்பட்டக் கருத்துக்களை உட்க்கொள்ளலாம். மொழிப்பெயர்ப்பின் செயல்களில் பொருளைக்குறித்து கருத்து ஒற்றுமையோ வேற்றுமேயோ ஏற்படும்பொழுது சமயமரபுகளின் ஒப்பமையற்ற நிலை வெளிப்படுகின்றது. அப்படியானால், நாம் இந்த சொறபாங்குகளை பொதுவிரி வகையினங்களாக ஒரு சமயச்சூழலிலிருந்து இன்னொன்றுக்கு பொருள் காண்பது என்ன புரிதல் உருவாக்குகின்றது? சுயச்சிந்தனையோடு ஒரு சமய அமைப்பிலிருந்து இன்னொன்றுக்கு மாறின ஒரு தனி நபர் எப்படி 'மொழிமாற்றத்தை' _ ஒரு மொழிச்சார்ந்த உலக எண்ணத்திலிருந்து இன்னொன்றுக்கு _ குறிப்பிடக்கூடும்? இப்பேற்ப்பட்ட மொழிமாற்றத்தில் எந்த கருத்துகள் தொலைகின்றது? எந்த புரிதல்கள் பெற்றுக்கொள்ளப்படுகிறது?

wordle

சமயமாற்றங்கள் மற்றும் தனித்துவங்கள், வேறுப்பட்ட இந்திய மொழிகளிலும் இலக்கியப் பாரம்பரியங்களிலும் வேறுப்பட்ட விதத்தில் செயல்ப்பட்டதா என்பதை நாங்கள் ஆய்வு செய்வோம். அதோடுகூட, ஆங்கிலத்திலும் ஜெர்மன் மொழியிலும் பெயர்க்கப்பட்டப்பொழுது இந்த வேற்றுமைகள் கடைப்பிடிக்கப்பட்டதா அல்லது அழிக்கப்பட்டதா என்பதையும் நாங்கள் ஆய்வு செய்வோம். இதன் மூலமாக, இந்திய இலக்கிய பாரம்பரியங்களிலும் ஜெர்மன்-ஆங்கில பாரம்பரியங்களிலும் சுயச்சரிதைகளுக்குள் இருக்கின்ற வேற்றுமைகள் எந்த அளவுக்கு மொழிப்பெயர்ப்பினை தடைப்படுத்தினது என்பதை ஆராயவும் வழிவகுக்கின்றது. நாங்கள் இந்த சுயசரிதைக் கதைக்கூற்றுக்களை சமயமாற்றத்தின் இன்னொரு கதைக்கூற்றோடு ஒப்பிட்டு ஆராய திட்டமிட்டுள்ளோம். அது சமயப்பரப்பாளர்களின் பொதுப்பணிப்பார்வையில் ஊழிய இடங்களின் சமயமாற்ற புள்ளி விபரங்களே.

Marathi, Tamil, Latin, English and German texts

18ஆம் நூற்றாண்டிலிருந்து தெற்கு ஆசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மேற்கத்திய மொழிப்பெயர்ப்பு கருத்துக்களும் பழக்கவழக்கங்களும், சமயநம்பிக்கை, மொழி மற்றும் தனித்துவத்தின் இடையே உள்ள உறவை இந்தியர்கள் புரிந்துகொள்வதில் மாற்றத்தை உருவாக்கினதா என்பதை நாம் ஆராய இருக்கின்றோம். தெற்கு ஆசியாவில் சமய கருத்துக்களும் தனித்துவங்களும் பரப்பப்பட்டதை சார்ந்து புது மொழிப்பெயர்ப்புக் கேள்விகளை பயன்ப்படுத்த திட்டமிட்டுள்ளோம். 18ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து ஐரோப்பிய அறிஞர்களால் செய்யப்பட்ட புனிதநூல்களின் மொழிப்பெயர்ப்பு எப்படி தெற்கு ஆசியாவில் சமயக்கருத்துக்களை அமைப்பதில் புது வழிமுறைகளை அறிமுகப்படுத்தியது?

மொழிப்பெயர்ப்பின் இந்த கருத்தியல் சிந்தனை, இந்தியச்சூழலில் சமயங்கள் எப்படி பார்க்கப்பட்டது, ஒப்பீடு செய்யப்பட்டது மற்றும் வகுத்துரைக்கப்பட்டது என்பதற்க்கு அடிப்படையானது என்பதை நாங்கள் வாதிடுகின்றோம். மையக்கருத்துக்களை மற்ற மொழிகளில் பெயர்க்க முடிகின்றதா இல்லையா என்பது ஐரோப்பிய அறிஞர்களை பொறுத்த வரையிலும், ஒரு சமயம் சமயமாக ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதையே நிர்ணயித்திருக்கின்றது.

wordle

நான்கு மொழிகளுக்கிடையே மொழிப்பெயர்ப்பின் பழக்கவழக்கங்களை ஒப்பிட்டு பார்ப்பதின் மூலமாக, மொழிப்பெயர்க்கப்பட்ட சமயமாற்ற கதைக்கூற்றுக்களின் தேர்ந்தெடுத்தல், பிரசுரித்தல் மற்றும் விற்பனைப் பரப்புதல், இந்தியாவின் அச்சுவரலாறின் புது தொழில் நுணுக்கங்களாலும் பழக்கங்களாலும் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை பரிசோதனை செய்யலாம். Shantivanam-Brahma-Christ காலனிய இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புது மொழிப்பெயர்ப்பு பழக்கங்கள் இந்திய மொழிகளுக்கிடையே உள்ள உறவினை எப்படி மாற்றியமைத்தது (உதாரணமாக, 'பண்டைய' சமஸ்கிருதம் மற்றும் இன்றைய நவீன இந்திய மொழிகளுக்கிடையே உள்ள உறவு) என்பதையும் மொழிமாற்றம் வழியான சமய அறிவை பரப்பின பாரம்பரிய வழிமுறைகளை எப்படி நிலைமாறச் செய்தது என்பதையும் நாம் கவனத்திற்க்கு எடுத்துக் கொள்வோம்.

மொழி அமைப்புகள் கருத்தியல் பார்வைகளை உருவாக்குகிறது என்ற அடிப்படையில், எந்த அளவுக்கு சமயக்கருத்துக்கள் பல்வேறு மொழிகளில் பல்வேறு விதமாக உருவாக்கப்படுகிறது? மற்றும், எந்த அளவுக்கு இந்த கருத்துக்கள் ஒரு மொழி அமைப்பிலிருந்து இன்னொன்றுக்கு மொழிப்பெயர்க்க முடியும்? புனிதமானவை மொழியின் மூலமாகவே அனுபவங்களாகவும் வெளிப்படுத்துதல்களாகவும் இருப்பதால் ஒரு சமய நம்பிக்கையை பகிர்ந்து கொள்வது, பகிர்ந்துக்கொள்ளப்பட்ட மொழியோடு ஒத்துப்போவதை எதிர்ப்பார்க்கிறது. ஆனால் சமயமாற்றத்தை பொறுத்தவரையில், ஒரு தனி நபர் இரண்டு சமயநம்பிக்கைகளைக் குறிப்பிட ஒரே மொழியை பயன்படுத்தும்பொழுது என்ன நடக்கிறது? மொழிநிலையில் சீரமைப்பு மட்டும்தான் எதிர்பார்க்கப்படுகிறதா? இங்கு எழும் கேள்வி என்னவென்றால், ஒரு சமயநம்பிக்கை ஒரு மொழிப் நிலையில் அனுபவமாக்கப்பட்டிருந்தால், இன்னொரு மொழிநிலையைப் பயன்ப்படுத்துவது அந்த சமய நம்பிக்கை அனுபவத்தை அல்லது அந்த சமய நம்பிக்கையின் இயல்புத்தன்மையை மாற்றி அமைக்கின்றதா?