Hephzibah Israel

hephzibah-israel
பணியாளர் விவரம்
நான் எடின்பரோ பல்கலைகழகத்தில் மொழிபெயர்ப்பு விரிவிரையாளராக பணியாற்றுகிறேன். என்னுடைய ஆய்வுத்துறை முக்கியமாக தெற்கு ஆசிய சூழலில் இலக்கிய மற்றும் புனித மொழிபெயர்ப்புகள் என்பதே. தமிழ் புனித இலக்கியங்களில் உருவாகுகின்ற மொழிபெயர்ப்பு மனப்பான்மைகளையும் பழக்கவழக்கங்களையும் நான் கூராய்வு செய்திருக்கிறேன். சமய, இலக்கிய மற்றும் சமூக சூழல்களில் கலாச்சார இடபெயர்ப்புக்கு தமிழ் கிறிஸ்தவ விவிலியத்தின் மொழிபெயர்ப்பு உதவினது எப்படி என்பதை நான் ஆய்வு செய்திருக்கிறேன். நான் Religious Transactions in Colonial India: Language, Translation and the Making of Protestant Identity (2011) என்ற நூலின் ஆசிரியை.

எண்ணங்களும் கருத்துக்களும், மொழிகள் மற்றும் கலாச்சாரங்களுக்கிடையே மொழிபெயர்ப்பின் மூலம் பயணிப்பது என்னை தொடர்ந்து ஈர்க்குகின்றது. 18ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து இந்திய மொழி இலக்கியங்களில் மொழிபெயர்ப்பு மூலமாக சமயமாற்றத்தின் எண்ணங்களும் சுயத்தைக்குறித்த எழுத்து வடிவங்களும் வளர்ந்தது எப்படி என்ற இந்த ஆய்வைக்குறித்து, என்னுடைய உடன் ஆராய்ச்சியாளர்களோடு சேர்ந்து தலைமை ஆய்வாளராக நான் மிகவும் உணர்ச்சிவசமடைகிறேன். தமிழில் எழுதப்பட்ட அல்லது மொழிபெயர்க்கப்பட்ட சமயமாற்ற கதைக்கூற்றுக்களை நான் ஆய்வு செய்ய இருக்கின்றேன். மொழிபெயர்ப்பு கல்வியின் கோட்பாட்டியலான அணுகுமுறைகளையும் முறைமைகளையும் இந்த செயல்திட்டத்தில் கொண்டுவர எதிர்ப்பார்க்கிறேன்.

Matthias Frenz

matthias-frenz
என்னுடைய ஆராய்ச்சியில், நான் ஐரோப்பாவுக்கும் தெற்கு ஆசியாவுக்கும் இடையே உளள கலாச்சார எதிர்படுதலை ஆய்வு செய்கிறேன். குறிப்பாக, தெற்கு ஆசியாவின் சமய பழக்கவழக்கம், இலக்கியம் மற்றும் மொழியில் ஆய்வு செய்கிறேன். தெற்கு இந்தியா என்னுடைய ஆய்வின் மையமாக இருக்கின்றது. இந்திய கலையிலக்கிய இயல், சமூக மனித இன இயல் மற்றும் சமய கல்வியின் அணுகுமுறைகளை இணைத்து செயல்படுகிறேன். இந்த செயல்திட்டத்தில், 18ஆம் மற்றும் 19ஆம் நூற்றாண்டில் தெற்கு இந்தியாவிலுள்ள ஜெர்மன் சீர்திருத்த சமயபரப்புச் சூழலில் எழுதப்பட்ட, மொழிபெயர்க்கப்பட்ட மற்றும் பிரசுரிக்ககப்பட்ட சமயமாற்ற கதைக்கூற்றுகளை ஆய்வு செய்ய உள்ளேன். கலாச்சாரச் செழிப்பும் பல்வேறு தன்மையுமுடைய சமயபரப்பு செயற்களத்தை எதிர்நோக்குகிற ஐரோப்பாவின் சீர்திருத்த இயக்கத்தின் உள்நோக்கியுள்ள பார்வையை நான் ஆய்வு செய்கிறேன். நான் இரண்டு சமயப்பரப்பு இயக்கங்களை மையப்படுத்துகிறேன்: முதலாவது, 18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் டேனிஷ் வணிக மையமான தரங்கம்பாடிக்கு தம்முடைய முதல் சமயப்பரப்பாளர்களை அனுப்பின ஹாள மிஷன், இரண்டாவது, 19ஆம் நூற்றாண்டின் முதல் கட்டத்தில் தெற்கு இந்தியாவில் பணியை ஆரம்பித்த பாஸல் மிஷன் என்பவையே. இந்த இரண்டு அமைப்புக்களும் ஜெர்மனியில் இருந்து தான் சமயப்பரப்பாளர்களை அனுப்பியது. அதே நேரத்தில், ஐரோப்பாவின் மற்ற சமயபரப்பு அமைப்புகளோடு திடமாக இணைந்து செயல்ப்பட்டது. Gottes-Mutter-Gottin (Wurzburg 2004) என்ற நூல் மற்றும் என்னுடைய பிரசுரிக்கப்பட்ட அனேக கட்டுரைகள் (‘Reflecting Christianity in Depictions of Islam’; ‘The Illusion of Conversion’) 18ஆம் நூற்றாண்டிலிருந்து இன்று வரையில் இந்தியாவுக்கு வந்த சீர்த்திருத்த மற்றும் கத்தோலிக்க சமயபரப்பு அமைப்புகளைக்குறித்துதான் இருக்கிறது.

John Zavos

john-zavos

பணியாளர் விவரம்
நான் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் தெற்கு ஆசிய கல்வி மூத்த விரிவிரையாளராக பணியாற்றுகிறேன். இந்து சமயம் மற்றும் இங்கிலாந்திலுள்ள இந்துசமய இயக்கங்களைக்குறித்து நிறைய கட்டுரைகளை (Religious Traditions in Modern South Asia, Routledge 2011) உடன்பணியாளர்களோடு சேர்ந்து எழுதியுள்ளேன் மற்றும் Public Hinduisms (Sage 2012) என்ற நூலுக்கு உடன்பணியாளர்களோடு சேர்ந்து பதிப்பாசிரியராக உள்ளேன். இந்து தேசீய இயக்கத்தைக்குறித்து அதிகமாக ஆய்வு செய்திருக்கிறேன். நான் The Emergence of Hindu Nationalism in India (Oxford University Press, 2000) என்ற நூலின் ஆசிரியர். இந்து தேசீயத்தைக்குறித்து என்னுடைய வரலாறு சார்ந்த மற்றும் நிகழ்கால ஆராய்ச்சியில், சமயமாற்றம் மற்றும் நவீன சமய, அரசியல் தனித்துவங்களை உருவாக்குவதில் சமயமாற்றத்தின் பங்கினையும் கூராய்வு செய்துள்ளேன். இந்த கண்ணோட்டத்தை தற்போதைய செயல்திட்டத்தில் இணைப்பது மூலம் சமயமாற்றத்தின் வரலாற்றுக்கூற்றுகளை ஆய்வு செய்ய உதவ உள்ளேன். இந்துசமய பிரதிநிதித்துவத்தைக்குறித்த AHRCயின் ஆராய்ச்சியின் (www.arts.manchester.ac.uk/hinduism/) தலைமை ஆய்வாளராக பணியாற்றிய என் அனுபவத்தை தற்போதைய செயல்திட்டத்தில் இணைத்து செயல்பட உள்ளேன்.

Milind Wakankar

இந்திய-இஸ்லாமிய ஆயிரம் ஆண்டுக்காலத்தின் முதல் பகுதியில் எழுதப்பட்ட சமய இலக்கியங்களை கொஞ்சம் காலமாக வாசித்து வருவதால், சமயமாற்றத்தைக்குறித்த hould beகேள்விகள் ஏற்கக்கூடியவையாக இருக்கின்றது. கீழ் ஜாதி மக்கள் மற்றும் குழுக்களின் அறிவாற்றல்சார்ந்த வரலாற்றைக்குறித்து உள்நோக்குடையதால், சமயமாற்றம் என்னை ஈர்க்கின்றது.

சமயமாற்றம் என்பது இந்த குழுக்களை பொறுத்தவரையிலும், அவர்களுடைய எதிர்கால வரலாற்றையே மாற்றியமைக்கக்கூடியதாக இருக்கும். அரசியல் களத்தில் இது உண்மையே. புது தாராள போங்குடைய முதலாளித்துவச் சூழலில் உயர்வடையவும் ஜாதி அடிப்படையில் கட்சிகள் உருவாகவும் இது வழிவகுக்கிறது. நவீன இந்தியாவின் அறிவுசார்ந்த வரலாற்றில், ராம்மோஹன்ராய் துவங்கி காந்தி வரையுள்ள காலகட்டம், சமயமாற்றத்தின் கருத்தியல் பணியை மையப்படுத்த வேண்டுமென்று நான் நம்புகிறேன். அதனால் கடந்த வருடத்தில், கபீர் மற்றும் பிர்ஸா முண்டாவின் (முண்டா பழங்குடி மக்களின் தலைவர்) ஒற்றுமைகளை கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறேன். சமய வரம்புகளை பாதுகாத்து மக்கள்க்குழுக்களை முந்தைய சமயத்துக்கே திரும்பிப்போக செய்கின்றவர்கள், சமயமாற்றமென்ற கருத்தினால் ஈர்க்கப்படவும் விலக்கப்படவும் செய்கின்றார்கள்.

இந்த இடத்தில்த்தான், சுயசரிதையால் தனிப்பட்ட மாற்றியமைப்புக்கப்பாற்பட்டு, சமூகபுரட்சியின் மூலமாக வாழ்கையே புது விதத்தில் அமைக்கப்பட சாத்தியமாகிறது. இனிமேல் இந்து சமயமோ கிறிஸ்தவமோ இஸ்லாமியமோ என்பதல்ல, மாறாக, தேசத்தின் மக்களாட்சி எதிர்காலத்தில் சமயம் மாறினவர்கள் சகிப்புத்தன்மையை கெஞ்சுகின்றவர்களாக இல்லாமல் உரிமையோடு பங்கேற்பவராக இருக்க வேண்டும்.

இந்த ஆய்வுக்கு அடித்தளமான தகவுகள் என்னுடைய நூலில் Subalternity and Religion (Routledge, 2010) உள்ளது. இந்த செயல்திட்டத்தில் அடுத்த இரண்டு வருடங்களில், மொழிபெயர்ப்பு, சமயமாற்றம், இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய பாரம்பரியங்களின் வரலாறு என்பவையின் சந்திப்பை, நான் பணி செய்யும் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் மனிதநேயத்துரையின் ஒத்துழைப்போடு இன்னும் ஆழமாக ஆராய முனைகிறேன்

Academic Advisors

Our project will benefit from the oversight and support of an international advisory board reflecting the international and interdisciplinary scope of our study:


My main interest in the current project concerns missionary translation and the convergence between translation and conversion.

Professor Theo Hermans

University College London, UK
Profile page at University College


Professor Philip Holden

National University of Singapore, Singapore
Profile page at National University of Singapore


Professor Udaya Kumar

(University of Delhi, India)
Profile page at University of Delhi


The transition from soul to self across the cusp of modernity has received significant attention in scholarship, particularly in the work of Michel Foucault. The “technology of the self” that Foucault traces in Western Europe can be perceived in the deployment of the autobiographical form in India. My interest in this innovative project is to see how a technology of the self emerges in autobiography and how questions of agency emerge in this context.

Dr Christian Lee Novetzke

University of Washington, USA
Profile page at University of Washington


I am a social historian working on late nineteenth to early twentieth century Tamilnadu, coterminous with the making of modernity in the region. I am also a Tamil writer engaged in writing on social and literary themes spanning the whole range of Tamil literary history. My interest in this project stems from these varied trajectories: as a historian of print culture (The Province of the Book: Scholars, Scribes, and Scribblers in Colonial Tamilnadu, 2012) I have explored the making of print artefacts, the material foundations of publishing and the emergence of new literary forms; and as a historian of Tamil modernity I have researched the making of the modern Tamil self (‘Excising the Self: Writing Autobiography in Colonial Tamilnadu in A.R. Venkatachalapathy, In Those Days There Was No Coffee: Writings in Cultural History, 2006) through autobiographical writing. In addition, I have recovered and edited, in Tamil, various life writings (most recently, Chendrupona Natkal, [The Memoirs of S.G. Ramanujalu Naidu], 2015 and Bharatiyin Suyasarithaikal: Kanavu, Chinna Sankaran Kathai,, [The Autobiographies of Subramania Bharati]). I am also a practising translator translating between Tamil and English. My editions of classical Tamil poetry (with M.L. Thangappa) have been published in Penguin Classics (Love Stands Alone: Selections from Tamil Sangam Poetry (2010) and Red Lilies and Frightened Birds: ‘Muttollayiram’, 2011).

Professor A.R. Venkatachalapathy

Madras Institute of Development Studies, Chennai, India
Profile page at Madras Institute of Development Studies


I am a social historian working on late nineteenth to early twentieth century Tamilnadu, coterminous with the making of modernity in the region. I am also a Tamil writer engaged in writing on social and literary themes spanning the whole range of Tamil literary history. My interest in this project therefore stems from varied trajectories: as a historian of print culture, I have explored the making of print artefacts, the material foundations of Tamil publishing and the emergence of new literary forms; as a historian of Tamil modernity I have researched the making of the modern Tamil self through autobiographical writing; and finally, I am also a practising translator, translating between Tamil and English

Professor Rupa Viswanath

Centre for Modern Indian Studies, University of Göttingen, Germany
Profile page at University of Göttingen